செவ்வாய், 7 ஜூன், 2011

ஆன்மீகம் என்பது என்ன?

                               ஆன்மிகம் தபஸ்விக்கும்,வாழ்வு குடும்பத்தில் உள்ளவர்க்கும் உரியது என்பது மரபு.நம்முடைய மரபு மதரீதியானது.நம்மில் ஒவ்வொருவரும் ஆன்மாவை உணர்வதற்காக தபஸ்வியாகவோ,துறவியாகவோ முடியுமா?
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பம் வழி செய்துள்ளது.அம் மாதிரியே ஆன்மிகத்தின் பலன்களை அனைவரும் பெறும்படி செய்து கொள்ளலாம்.

                                                    சாதாரணமாக எந்த இடத்திலும் பொய்யும்,மெய்யும் கலந்து தான் இருக்கும்.அதில் மெய்யைத் தேர்ந்தெடுத்தல் ஆன்மிகம்.ஒரு வேலையை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்.நேர்த்தியோடு செய்யும் வேலையில் தெய்வாம்சம் உள்ளது.

1 கருத்து:

  1. மிகப் பிரமாதமாக துவங்கி இருக்கிறீர்கள்
    ஏனோ சட்டென நிறுத்திவிட்டதைப்போன்ற
    உணர்வினைத் தவிர்க்க இயலவில்லை
    எனக்கும் கூட அரசியல் பிடிக்கும்
    கட்சிகள் பிடிக்காது
    ஆன்மீகம் பிடிக்கும்
    மதம் பிடிக்காது
    இப்படியே உள்ளார்ந்த நோக்கங்கள் பிடிக்கும்
    செயல்பாடுகளில் உள்ள சுய நலமும்
    செயற்கைத்தனமும்தான் உடன்பாடு இல்லாதது
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு